%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
Thursday, 22 August 2019 - 8:10
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று
114

Views
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பாக உள்ளது.

கொழும்பு பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ள நிலையில், இன்று இறுதிப் போட்டி ஆரம்பமாக உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

லண்டன் லீட்ஸில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30ககு இந்தப் போட்டி ஆரம்பமாக உள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஏஷஸ் தொடரில் இதுவரை இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், ஒரு போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

மேற்கிந்தியத் தீவுகளின் எண்டிகுவா பர்புடாவின் நோர்த் சவுண்டில் இலங்கை நேரப்படி பிற்பகல் 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்மாக உள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE