%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
Saturday, 24 August 2019 - 8:10
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று.. மழை குறுக்கிடுமா?
3

Shares
397

Views
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு பீ.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறும் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 6 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதேவேளை, ஏஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது, 6 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 179 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதேநேரம், இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது,

இதேவேளை, இந்திய மற்றும்மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 297 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE