+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AF+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE..+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+244+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Saturday, 24 August 2019 - 13:35
ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பெற்ற தனஞ்ஜய டி சில்வா.. இலங்கை முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்கள்
4

Shares
482

Views
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்ஜய டி சில்வா 109 ஓட்டங்களை அதிகூடுதல் ஓட்டங்களாக பெற்றுக்கொடுத்தார்.

இதன்மூலம் தனஞ்ஜய டி சில்வா, தனது 5 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதேவேளை, தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, சற்று முன்னர்வரை 2 விக்கட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE