%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+T20+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Saturday, 24 August 2019 - 15:54
நியூஸிலாந்திற்கு எதிரான T20 தொடர்: இலங்கை குழாம் அறிவிப்பு
7,197

Views
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமிற்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு நிரோஷன் டிக்வெல்ல உப தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த குழாத்திலிருந்து அஞ்சலோ மெதிவ்ஸ், திசர பெரேரா ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டியானது செப்டெம்பர் 1 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விபரம் இதோ...

லசித் மாலிங்க (தலைவர்)
நிரோஷன் டிக்வெல்ல
அவிஸ்க பெர்ணான்டோ
குசல் ஜனித் பெரேரா
தனுஸ்க குணதிலக
குசல் மென்டிஸ்
செஹான் ஜெயசூரிய
தசுன் ஷானக
வனிந்து ஹசரங்க
அகில தனஞ்சய
லக்ஷான் சந்தகென்
இசுரு உதான
கசுன் ரஜித்த
லஹிரு குமார
லஹிரு மதுஷங்க

 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE