%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
Sunday, 25 August 2019 - 8:45
நான்காம் நாள் ஆட்டம் இன்று
156

Views
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதேவேளை, ஏஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 67 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில், 359 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடரும் இங்கிலாந்து அணி, 7 விக்கட்டுக்கள் கைவசம் உள்ளநிலையில் வெற்றிக்காக 203 ஓட்டங்களைப் பெறவேண்டி உள்ளது.

இதேவேளை, இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி, நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவின்போது, 3 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE