%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F+
Wednesday, 11 September 2019 - 11:05
கோலி-ரோஹித் பிளவு இந்திய அணிக்குள் விஸ்வரூபம் எடுக்குமா..?
2

Shares
293

Views
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையே பிளவு இருப்பதாக சமீப காலமாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் முதல் முறையாக இந்திய தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி வாய் திறந்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, 5 வருட காலமாக இந்திய அணி வீரர்களுடன் நான் நெருக்கமாக பழகி வருகின்றேன். கோலி-ரோஹித் இடையே கருத்து முரண்பாடு இருப்பதென்பது உண்மைக்கு புறம்பானதொரு விடயம். அணியொன்றிலுள்ள 15 வீரர்களும் ஒற்றுமையாக இருக்கும் போதுதான் அணியில் முன்னேற்றம் ஏற்படும் என குறிப்பிட்டார்.

மேலும், உலகக் கிண்ண தொடரின் போது இவ்விருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்திருந்தால், ரோஹித் சர்மா எவ்வாறு 5 சதங்களை பெற்றிருக்க முடியம்? இவ்வாறு சிறப்பாக விளையாடும் வீரருடன் கோலி ஏன் பிரச்சினையில் ஈடுபட வேண்டும்? உண்மையை சொல்ல வேண்டுமெனில், அவர்கள் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள். போட்டியின் போதும் கூட இருவரின் ஜோடி சேர்ந்து ஆடிய ஆட்டங்கள் பல அற்புதமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சமீபத்தில் தனக்கும் ரோஹித்திற்கும் இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லையென இந்திய அணித் தலைவர் விராட் கோலியும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE