%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE..%21
Wednesday, 11 September 2019 - 12:53
விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ள ரபாடா..!
60

Views
இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடருக்கான தென்னாபிரிக்க அணிக்கு க்யின்டன் டி கொக் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள், இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 20க்கு 20 தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில், அணித் தலைவர் பாப் டுப்ளிஸிஸ் குறித்த போட்டியில் பங்கேற்காத நிலையில், 20க்கு 20 தொடருக்கான தென்னாபிரிக்க அணியை க்யின்டன் டி கொக் வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு 20 தொடருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு க்யின்டன் டி கொக்கினை தலைவராக நியமிப்பதை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தலைவர் விராட் கோலி தலைசிறந்த வீரர் என தென்னாபிரிக்கா அணியின் வேகபந்து வீச்சாளர் கசிகோ ரபாடா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டித் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரபாடா வெள்ளை பந்துகளுக்கு சிறப்பாக முகங்கொடுக்க கூடிய வீரர் என்பதை விராட் கோஹ்லி நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது அணியின் வெற்றிக்காக அவர் போராடக் கூடிய ஒரு வீரர் என்றும் ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE