%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
Wednesday, 11 September 2019 - 17:55
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணி குழாம் அறிவிப்பு...
1,764

Views
பாகிஸ்தான் கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டி தொடர்களுக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி இந்த குழாமிற்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இதில் ஒருநாள் தொடர் குழாமின் தலைவராக லஹிரு திரிமன்ன பெயரிடப்பட்டுள்ளார்.

இதனுடன் தனுஸ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஸ்க பெர்னாண்டோ, ஒசத பெர்னாண்டோ, சேஹான் ஜயசூரிய, தசுன் சானக, மினோத் பானுக, அஞ்சலோ பெரேரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் ஒருநாள் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேலும் லக்ஸான் சந்தகேன், நுவன் பிரதீப், இசுரு உதான, கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோரும் இந்த குழாமில் அடங்கியுள்ளனர்.

இதேவேளை, இருபதுக்கு போட்டி தொடர் குழாமின் அணித் தலைவராக தசுன் சானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் தனுஸ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஸ்க பெர்னாண்டோ, ஒசத பெர்ணான்டோ, செஹான் ஜயசூரிய, அஞ்சலோ பெரேரா, பானுக ராஜபக்ஸ, மினோத் பானுக, லஹிரு மதுசங்க, வனிந்து ஹசரங்க, லக்ஸான் சந்தகேன், இசுரு உதான, நுவான் பிரதீப், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமாரவும் இந்த குழாமில் அடங்கியுள்ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 27 ஆம் திகதி கராச்சியில் இந்த போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE