%E0%AE%8F%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...
Wednesday, 11 September 2019 - 21:56
ஏஷஸ் தொடரின் இறுதி போட்டி நாளை ஆரம்பம்...
28

Views
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவதும் இறுதியுமான போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இதுவரை நடைபெற்று முடிந்த 4 போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், 2க்கு 1 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், நாளை ஆரம்பமாகும் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் துப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.

ஏஷஸ் தொடரில், ஜொப்றா ஆச்சரின் பந்துவீச்சில் தாக்கப்பட்டமையினால், 3 இன்னிங்ஸ்களில் ஸ்மித் பங்கேற்கவில்லை.

எனினும், 5 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டைச்சதம் அடங்களாக 3 சதங்கள், 2 அரைச்சதங்களுடன் 671 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில், 937 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE