+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 September 2019 - 13:15
பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்ய தீர்மானம்
106

Views
இலங்கை கிரிக்கட் அணி இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நிலைமைகளை மீளாய்வு செய்ய சிறிலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக, பிரதமர் அலுவலகத்தினால், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சுற்றுப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், பாதுகாப்பு மீளாய்வை செய்யுமாறும் கோரப்பட்டிருந்தது.

இதன்படி சிறிலங்கா கிரிக்கட், அங்கு பாதுகாப்பு மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE