%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
Friday, 13 September 2019 - 20:28
நிதானமாக துடுப்பாடும் அவுஸ்திரேலியா
37

Views
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஏஷஸ் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் நடைபெறுகின்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடும் அவுஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளை வரை 4 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.

அதேவேளை, நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE