19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா

Saturday, 14 September 2019 - 20:31

19+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சம்பியனாக இந்திய அணி தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணியை வீழ்த்தியே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.







Exclusive Clips