ஆப்கானிஸ்தானின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி..!

Monday, 16 September 2019 - 11:08

%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%21
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சிம்பாம்வே ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே சிம்பாம்வே அணியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி, நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முகமது நபி 84 ஓட்டங்களையும், அஸ்கர் ஆப்கன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து 20 ஓவர்கள் நிறைவில் அந்த அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

165 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முகமது நபி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஒரு வெற்றியை பெற்ற பங்களாதேஷ் இரண்டாவது இடத்திலும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத சிம்பாம்வே அணி கடைசி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips