பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி

Sunday, 22 September 2019 - 8:17

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
பங்களதேஸில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களதேஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

இந்த முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.







Exclusive Clips