நான்காம் நாள் ஆட்டம் இன்று...

Sunday, 13 October 2019 - 13:17

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்ற வருகின்றது.

போட்டியில் பலோவன் முறையில் தென்னாபிரிக்க அணி மீண்டும் துடுப்பாடி வருகின்றது.

இதற்கமைய, சற்றுமுன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றுள்ளது.

முன்னதாக தென்னாபிரிக்க அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதேவேளை, இந்திய அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips