இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி..

Sunday, 13 October 2019 - 20:16

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+137+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தமது முதல் இனிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதன்பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸ்க்காக துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து போட்டியின் நான்காம் நாளான இன்று பலோவன் முறையில் தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட்கோலி தேர்வானார்.








Exclusive Clips