ஐசிசியின் உறுப்புரிமையை மீண்டும் பெற்ற சிம்பாம்வே மற்றும் நேபாளம்

Monday, 14 October 2019 - 21:30

%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
சிம்பாப்வே மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், சர்வதேச கிரிக்கட் பேரவையின் அங்கத்துவ நாடுகளாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் உயர்மட்ட சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிரிக்கட் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக சிம்பாப்வேயிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது சர்வதேச கிரிக்கட் சபையின் அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுவதாக சிம்பாப்வே இணங்கியதை அடுத்து, அதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சர்வதேச கிரிக்கட் ஒழுங்குவிதிகளை மீறியமைக்காக 2016ம் ஆண்டு நேபாளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips