7 விக்கட்டுக்களினால் வெற்றி

Thursday, 07 November 2019 - 8:34

7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
 
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.2 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 
இதையடுத்து, 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 46.3 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
 
இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.







Exclusive Clips