%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
Tuesday, 03 December 2019 - 9:43
இரண்டாவது போட்டி சமநிலையில்... தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து..!
94

Views
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியானது சமநிலையில் முடிந்துள்ளது.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 375 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பாக லெத்தம் 105 ஓட்டங்கள், மிச்சல் 73 ஓட்டங்கள், வெட்லிங் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 4 விக்கட்டுக்களையும் வோக்கர்ஸ் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸில் ஆரம்பித்த இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோய் ரூட் 226 ஓட்டங்களையும், பர்ன்ஸ் 101 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வாக்னர் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. கேன் வில்லியம்சன் 104 ஓட்டங்களுடனும் டெய்லர் 105 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று போட்டியின் இறுதி நாள் என்பதால், போட்டி சமநிலையில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோய் ரூட் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக நியூசிலாந்து அணியின் வாக்னர் தெரிவானார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE