%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
Thursday, 12 December 2019 - 7:58
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ..
173

Views
 இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இராவல்பிண்டியில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், இன்றைய இரண்டாம் நாளில், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

பெர்த்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE