இலங்கை அணி 308 ஓட்டங்கள்..

Sunday, 15 December 2019 - 13:19

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+308+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் தமது முதல் இனிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி சற்றுமுன்னர் வரை 1 விக்கட்டினை இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக தமது முதல் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இலங்கை 6 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 102 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது 6 வது சதத்தை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips