%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
Saturday, 18 January 2020 - 21:04
மூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது..
88

Views
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாப்பிரிக்க அணி மழைக்காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரை 5 விக்கட்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் ஒல்லி பொப் ஆட்டமிழக்காது 135 ஓட்டங்களையும் பென் ஸ்டொக்ஸ்  120 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொண்டனர்.

பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மஹாராஜ் (முநளாயஎ ஆயாயசயத) 5 விக்கட்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE