%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
Sunday, 19 January 2020 - 21:00
சிம்பாம்வே அணியின் சிறப்பான ஆரம்பத்துடன் நிறைவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்..!
558

Views
இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாம்வே அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

அவ்வணி சார்பாக மஸ்வாவுரே 55 ஓட்டங்களையும் கசுஸா 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். அத்தோடு எர்வின் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் எம்புல்தெனிய மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

சிம்பாம்வே அணியினர் முதலாவது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டமை விசேட அம்சமாகும். நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE