%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
Wednesday, 22 January 2020 - 13:40
இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி
1

Shares
189

Views
3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறுகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியானது பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்திலும் மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் மாதம் 1ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இருபதுக்கு 20 போட்டிகளானது மார்ச் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளும் இதுவரையில் மோதியுள்ள 9 இருபதுக்கு 20 போட்டிகளில் ்இலங்கை அணி 6 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளதோடு, இறுதியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE