150+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D
Wednesday, 22 January 2020 - 17:56
150 ஓட்டங்களை கடந்தார் மெத்யூஸ்
1,089

Views
இலங்கை சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றனது.

தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 5 விக்கெட்டுக்களை இழந்து 452 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக எஞ்சலோ மெத்யூஸ் 169 ஓட்டங்களுடனும் மற்றும் டிக்வெல்ல 56 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பாம்வே அணியை விட இலங்கை அணி 95 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாம்வே அணி 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE