%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+T20+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+21%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
Saturday, 15 February 2020 - 13:59
மகளிருக்கான உலகக்கிண்ண T20 தொடர் 21ஆம் திகதி ஆரம்பம்..!
152

Views
மகளிருக்கான உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதன்படி, இன்று முதல் உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சி போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி எதிர்கொள்கிறது.

இதேவேளை, இலங்கை மகளிர் அணி நாளை தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளதோடு, உலகக்கிண்ண தொடரில் முதலாவது போட்டியாக எதிர்வரும் 22ஆம் திகதி நியூசிலாந்து மகளிர் அணியை பர்ன் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE