நியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி

Tuesday, 25 February 2020 - 9:28

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+10+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் நேற்றைய தினம் வெற்றிப்பெற்றது.

வெலிங்கடனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்றதுடன் நியூசிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 348 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பின்னர் 9 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய நியூசிலாந்து அணி விக்கட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இதற்கமைய இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.







Exclusive Clips