நடிகை கௌஹர் கான் ஏன் அறையப்பட்டார்? வெளிவரும் உண்மைகள்

Monday, 05 January 2015 - 15:54

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பொலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை கௌஹர் கான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருபவர். முபையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது பார்வையாளர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கௌஹர் கானின் கன்னத்தில் அறைந்த அகில் மாலிக் என்ற இளைஞரை  பொலிஸார்  உடனடியாக  கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது கௌஹர் கான் முஸ்லிம்மாக இருந்து கொண்டு குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு மேடையில் தோன்றியமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனவும் இதனாலேயே கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் சர்ச்சைய்யை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது  குறித்து புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் மாலிக்.

அதாவது தன்னை கன்னத்தில் அறையும் படி கூறியதே கௌஹர் கானே என தெரிவித்துள்ளார் மாலிக். இது ஒருவொரு சிறந்த விளம்பர உத்தியாக அமையுமென கௌஹர் கான் கருதியமையாலேயே இவ்வாறு செய்யச் சொன்னதாகவும் மாலிக் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக தனக்கு பணம் வழங்க கௌஹர் கான் இணங்கியதாகவும் மாலிக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.