புதிய சர்ச்சையில் அஞ்சலி

Monday, 26 January 2015 - 16:43

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF
நடிகை அஞ்சலி பற்றி சமீபத்தில் பரபரப்பு செய்தியொன்று இந்திய ஊடகங்கள் சிலவற்றில் வெளியானது.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றுக்கு நெருங்கிய தோழிகளுடன் அவர் சென்றதாகவும், அங்கு மது அருந்தி சர்ச்சையில் ஈடுபட்டதாகவும் தன் மீது மோதிய ஒரு வாலிபரை அடிக்க பாய்ந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த செய்தி ஆந்திராவில் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. தற்போது இச்சம்பவம் குறித்து அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

"என்னை பற்றி தவறாக வதந்திகள் பரவி உள்ளன. நான் வெளிநாட்டுக்கு சென்று படங்களில் நடித்து விட்டு இரு தினங்களுக்கு முன்புதான் ஐதராபாத் திரும்பினேன்.

இரவு 9 மணிக்கு நண்பர்கள் சிலருடன் விடுதியொன்றுக்கு சாப்பிட சென்றேன். அப்போது சில புகைப்பட கலைஞர்கள் என்னை சூழ்ந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்கள். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இங்கு வந்து இருக்கிறேன். சினிமா வேலையாக வரவில்லை. எனவே படம் எடுக்க வேண்டாம் என்று கூறி மறுத்தேன். "

அத்துடன் ஒரு வாலிபர் போதையில் தொந்தரவு செய்வது போன்றும் நடந்து கொண்டார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது எப்படியோ பொலிஸுக்கு தெரிந்து அவர்களும் அங்கு வந்து விட்டனர். அவர்களிடம் நடந்த விஷயங்கள் கூறப்பட்ட து. விடுதி நிர்வாகத்தினர் சம்பவத்திற்காக என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் தொலைக்காட்சிகளில் குடி போதையில் நான் சர்ச்சையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். நான் மது குடித்ததாக வந்த செய்தி தவறானது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் இந்த செய்தியை பரப்பி உள்ளனர். அந்த விடுதியின் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தால் உண்மை தெரியும். " என்றார்.