வெளியாகியது 'என்னை அறிந்தால்' : களைகட்டிய திரையரங்குகள்

Thursday, 05 February 2015 - 9:34

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%27%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%27+%3A+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அஜித் ரசிகர்கள் உட்பட தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த திரைப்படமான 'என்னை அறிந்தால்' இன்று காலை இந்தியா உட்பட பல நாடுகளிலும், இலங்கையில் நேற்று இரவும் வெளியாகினது.

கௌதம் மேன ன் இயக்கத்தில் அஜித் , அருண் விஜய் , த்ரிஷா , அனுஷ்கா, விவேக் உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையன்றே வெளியாகுவதாக இருந்தது.

எனினும் பட த்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையாத காரணத்தினால் படத்தின் வெளியீட்டுத் திகதி தள்ளிப்போனது.

இந்தியாவின் பல திரையரங்குகளில் நேற்று முதலே படத்தின் வெளியீட்டைக் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

படம் வெளியாகும் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

இதேவேளை படத்தினை ஏற்கனவே பார்த்தோர் படம் சிறப்பாக இருப்பதாகவும் ,  படத்தை மிகவும் ரசித்ததாகவும் சமூகவலைத் தளங்களில் தெரிவித்துள்ளனர்.
 

படங்கள்- டுவிட்டர்