நீதுவுக்கா இந்த நிலை?

Friday, 13 February 2015 - 15:37

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%3F

நடிகை நீது சந்திராவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது.

அமீர் இயக்கிய ஆதிபகவன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நீது சந்திரா.

அந்தப் படம் மட்டும் வெற்றியடைந்திருந்தால்நீது இந்தநேரம் அனுஷ்கா, காஜல் அகர்வால், சமந்தாவுக்கு இணையாக இருந்திருப்பார்.

எனினும் ஆதிபகவன் படத்தின் படு தோல்வி நீது சந்திராவின் சினிமா வாழ்க்கையையே கெடுத்து விட்ட்து.

இயக்குனர் அமீரின் பேச்சைக்கேட்டு ஆதிபகவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வேறு படத்தில் நடிக்காமல் இருந்தார்.அதுவே பிறகு அவருக்கு வினையாகிப்போய்விட்டது

ஆதிபகவன் படத்தை நம்பி மற்ற படங்களில் நடிக்காமல் இருந்த நீது சந்திரா, கலைநிகழ்ச்சிகளில் நடனம் ஆடி நன்றாக பணம் சம்பாதித்தார்.

ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு 15 இலட்சம் ரூபா வாங்கினார். இன்றைக்கு அவருக்கு ஒரு இலட்சம் கொடுக்கக் கூட ஆள் இல்லை. அதுமட்டுமல்ல, முன்னணி ஹீரோக்கள் படங்களில் நமக்கு இனி வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்ற யதார்த்தத்தையும் புரிந்து கொண்டுவிட்டார்

அதனால்தான், வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் ஆர்.கே.வுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார். ஏன் இப்படி என்ற கேட்டால், " வைகை எக்ஸ்பிரஸ் படத்தில எனக்கு சூப்பர் நல்ல வேடம், அதுமட்டுமல்ல, அந்தப்படத்தில் எனக்கு இரட்டை வேடம்" என்று சமாளிக்கிறார். நீதுவுக்கு தெரியுமோ தெரியாதோ.. வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நீது சந்திரா மட்டும் கதாநாயகி இல்லை, இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா என வேறு சில நடிகைகளும் நடிக்கிறார்கள்.

பாவம் நீது சந்திரா. எப்படி இருந்த அவர் இப்படி ஆகி விட்டார்.