முகாமையாளரால் ஏமாற்றப்பட்ட நமீதா

Tuesday, 17 February 2015 - 11:54

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE

தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நமீதா.

அசரவைக்கும் உயரம் அதற்கேற்ற உடல்வாகு என பார்ப்போரை வாயைப் பிளக்க வைத்தவர் அவர்.

இதனாலேயே அஜித், விஜய் படங்களிலும் நடித்தார் நமீதா. எந்த உடல்வாகு அவருக்கு வாய்ப்பைத் தேடித் தந்ததோ அதே உடல்வாகு அளவு மீறி போனதால் வாய்ப்புகளை இழந்தார் நமீதா.

எனினும் கடை திறப்பு விழா, நடன நிகழ்ச்சிகள் என்பவற்றில் பங்குபற்றி வாழ்வாதாரத்துக்கு வழி செய்து வருகிறார் நமீதா.

இந்நிலையில் இந்தியாவின் சூரத்தில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதாவிற்கு உரிய சம்பளத்தினைக் வழங்காமல் முகாமையாளர் பணத்துடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

இது தொடர்பில் தெரியவருவது: குஜராத் மாநிலம் சூரத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் நடனமாடுவதற்கு நமீதாவை அழைத்துள்ளனர். குறிப்பிட்ட தொகையை சம்பளமாக தருவதாகவும் பேசியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ஏற்கனவே பல தடவை நமீதாவை அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனராம்.

மேலும் பேசிய சம்பளமும் ஒழுங்காக கொடுத்து இருக்கிறார்கள். எனவே சூரத்தில் நடனமாட சம்மதித்துள்ளார்.

ஆனால், அக்கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பிறகு பேசிய தொகையை நமீதாவுக்கு கொடுக்கவில்லையாம், பணத்துடன் முகாமையாளர் தலைமறைவாகி விட்டாரம். அவரது கைப்பேசியில் நமீதா தொடர்பு கொண்டுள்ளார். 

ஆனால் அதுவும் இயங்கவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த நமீதா இதுகுறித்து கூறும்போது, "நடன நிகழ்ச்சிக்கு எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். சக நடிகைகளும் இதுபோல் ஏமாறக் கூடாது. பேசிய பணத்தை முன் கூட்டியே வாங்கி விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.