'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' 1009 வாரங்களைக் கடந்தும் நிறுத்தப்படவில்லை

Friday, 20 February 2015 - 14:34

%27%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B2%E0%AF%87+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%27++1009+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

ஷாருக்கான்- கஜோல் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில்  'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' என்ற திரைப்படம்1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வெளியாகியது.


இத்திரைப்படம் இன்றளவும் மும்பையின் 'மரத மந்திர்' என்ற திரையரங்கில் 1009 வாரங்களாக( சுமார் 20 வருடங்கள்) திரையிடப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பல காட்சிகள் காண்பிக்கப்பட்டபோதிலுக் பிற்காலங்களில் தினசரி ஒரு காட்சி வீதம் காட்டப்பட்டு வந்தது.

      

மேலும் சாதாரண டிக்கெட் விலையை விட குறைந்த விலையில் இப்பட த்திற்காக டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டது.

எனினும் இவ்வளவு வருடங்கள் ஒரு திரைப்படம் , திரையிடப்பட்டமை எத் திரைப்படத்தாலும் எட்டிப்பிடிக்க முடியாத ஏன் நினைத்துக்கூட பார்க்க முடியாத இமாலய சாதனையாக கருதப்படுகின்றது.

இந்தித் திரைப்பட வரலாற்றில் பெரும் வசூலை அள்ளிய படங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகின்றது. இத்திரைப்படம் 10 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளது

இந்நிலையில் இப்பட த்தின் சாதனை ஓட்டம் நேற்று வியாழக்கிழமை காலை 9.15 மணிக் காட்சியுடன் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

வழக்கமான புதிய படங்கள் 3 காட்சிகள் திரையிடப்பட வேண்டி இருப்பதால் திரையரங்க நிர்வாகமும், யாஷ் சோப்ரா பட நிறுவனமும் இணைந்து திரையரங்கில் இருந்து இப்படத்தை நீக்க முடிவு செய்தது.

இன்றளவும் பலர் இத்திரைப்பட த்தை வந்து பார்ப்பதால் திரையரங்க நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்தாலும் ஊழியர்கள் அதிகாலை முதல் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது.மேலும் முன்னரைப் போல கூட்டம் அதிகமாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுடன் இத்திரைப்படம் காட்சிப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னும் ஒரு வாரத்துக்கு இத்திரைப்படம் காட்சிப்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் படத்தின் ரசிகர்கள் பலர் திரையரங்கிற்கு அழைப்பை மேற்கொண்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியமையாகும். மேலும் சமூகவலைதளங்களிலும் இதற்கு கவலை தெரிவித்திருந்தமையை அடுத்து இத்திரைப்பட த்தின் ஓட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.