கபாலி செய்த புதிய சாதனை- தயாரிப்பாளர் தாணு பெருமித அறிவிப்பு

Monday, 25 January 2016 - 20:28

%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. இப்படத்திற்கான வியாபாரம் பற்றிய சீக்ரெட்டை படத்தின் தயாரிப்பாளர் தாணு வேலூரில் ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் கூறினார்.

தாணு பேசும்போது, ' இதுவரை எந்தப் படத்திற்கும் இல்லாத சாதனை ரஜினியின் கபாலி படத்திற்கு நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் 'கபாலி' படம் எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது.

வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது இதுதான் உண்மை. 

,யாருக்குமே இதுவரை வியாபாரம் இரண்டரைகோடி ரூபாயைத் தாண்டவில்லை' என்று குறிப்பிட்டார். ஒரு படத்தின் வியாபாரம் பற்றி தமிழ்த்திரையுலகில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை.

அதனால் தாணு இப்படிப் பேசியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும் தன்ஷிகா, கலையரசன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்