பல சோதனைகளை கடந்தால்தான் சாதனை: அனிருத் உருக்கம்

Wednesday, 27 January 2016 - 8:36

%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%3A+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பல சோதனைகளைக் கடந்தால் தான் சாதனை படைக்க முடியும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்துகொள்ளும் 'ஐஐஎஃப்ஏ உத்சவம்' நிகழ்ச்சி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திரைவிழா 'சென்னைக்காக ஒன்றிணைவோம்' என்ற பெயரில் சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெறுகிறது.  தமிழ், மலையாள நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இவ்விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது 'கத்தி' படத்துக்காக அனிருத்துக்கு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டு அனிருத் பேசும்போது, 'இவ்விருதை வென்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்விருதை என்னுடன் பணியாற்றிய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இசையமைப்பாளர்கள் மேடையில் வந்து விருது வாங்கி வெளிச்சத்துக்கு வந்துவிடுகிறோம். ஆனால், இசைக் கலைஞர்களுக்கு அவ்வாறு கிடையாது.

கடந்த 4 ஆண்டுகளில் 11 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். 'கொலவெறி' பாடல் வெளியானதில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக என்னைப் பற்றி அவதூறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இத்தருணத்தில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. அவதூறு செய்திகளை எல்லாம் கடந்து இவ்விழாவில் கலந்து கொண்டு பேசுகிறேன். நிறைய பேச வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

பல சோதனைகளைக் கடந்தால் தான் சாதனை படைக்க முடியும். அந்த வகையில் இவ்விருதை எடுத்துக் கொள்கிறேன். இன்னும் நிறைய விஷயங்கள் பண்ண வேண்டும் என்பதற்காகவும் எடுத்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.