தமிழ் புத்தாண்டு போட்டிக் களத்தில் 'தெறி' மற்றும் '24'...!

Wednesday, 27 January 2016 - 10:52

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%27%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%2724%27...%21
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா ,ஏமி ஜாக்சன் , இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'தெறி'.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் டீஸர் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

மேலும் ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியீடாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '24'.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார், 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

3 வேடங்களில் சூர்யா நடித்திருப்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாகும் என ஈராஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஒரே நாளில் விஜய் மற்றும் சூர்யா படங்கள் வெளியானால் படத்தின் வசூல் பிரியும் என்பதால் நல்லதல்ல என்று விநியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.