ரஜினி ,விஜய் , அஜித் பற்றி சிவகார்த்திகேயனின் சுவாரஸ்யமான பதில்கள்

Wednesday, 27 January 2016 - 20:48

%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%2C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%2C+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

ரஜினி, அஜித், விஜய் பற்றி ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. ஜனவரி 14ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முதல் 4 நாட்களில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வசூலை 'ரஜினி முருகன்' தாண்டிவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பதிலளித்தார். அவர் அளித்த சுவாரசியமான பதில்களின் தொகுப்பு..

* இரட்டை வேடத்தில் நடிப்பதற்கு சரியான கதை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.

* அஜித்துக்கு தம்பியாக வாய்ப்பு அமையும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன்.

* எனது வளர்ச்சிக்கு எனது நண்பர்கள் நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள்.

* 'ரஜினி முருகன்' வெற்றியடைந்ததால் நிறைய மாதங்கள் கழித்து சந்தோஷமாக இருக்கிறேன்.

* 'ரஜினி முருகன்' படம் பார்த்துவிட்டு ரஜினி சார் போனில் அழைத்து பேசும் போது நடுக்கமாக இருந்தது. முழுமையான நாயகனாக ஆகிவிட்டீர்கள் என்று குறிப்பிடத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது.

* தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர். அதை அவர் ஹாலிவுட்டிலும் நிரூபிப்பார்.

* அனைத்து தரப்பான படங்களும் பண்ண ஆசை தான். தற்போது நிறைய வித்தியாசமான கதைகள் வருகிறது, வித்தியாசமான படங்கள் பண்ண கண்டிப்பாக முயற்சி பண்ணுவேன்.

* 'ப்ரேமம்' படத்தில் நிவின் பாலி நடிப்பை என்னால் கொண்டுவர முடியாது. அப்படத்தை பண்ண மாட்டேன்.

* முதல் ஆளாக விக்ரம் சார் தான் "நீ ஒரு நாயகன்" என்று பல நிகழ்ச்சிகளிலும், பொது மேடைகளிலும் குறிப்பிட்டார்.

* படத்தில் காமெடி வேடத்தில் நடிப்பது தான் கடினம். என் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் சந்தோஷமடைய வேண்டும் என்பது என் ஆசை.

* எனது அடுத்த படத்தின் பெயர் 'நர்ஸ் அக்கா' அல்ல. படத்தின் பெயர் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

* ஜெயம் ராஜா சார் படம் அவருடைய பாணியில் உருவாகும் படமாகும். எனக்கு புதுமையானதாக இருக்கும்.

* எனக்கு 'மெரினா' முதல் வாய்ப்பு வந்த போது நான் நம்பவில்லை. என்னை அழைத்து வந்ததிற்கு பாண்டிராஜ் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

* நான் ஜெயித்துக் கொண்டே இருக்க 'உன்னால் முடியாது' என்கிற வார்த்தைகள் தான் தூண்டுகோலாக இருக்கிறது.

* 'ரஜினி முருகன்' பல முறை தேதிகள் மாற்றி வெளியானது. ஆனால் மக்களும், ரசிகர்களும் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

* தமிழ் திரையுலகில் எனக்கு விஜய் சாரிடன் நடனம் ரொம்ப பிடிக்கும்.

* எதிர்காலத்தில் காமெடி இல்லாத கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பண்ணுவேன்.

* நிஜ வாழ்க்கையில் நான் இதுவரை சிகரெட் பிடித்ததில்லை.

* 'எல்லா பிரச்சினையும் இந்த ரஜினி முருகன் பார்த்துகுவான்' என்கிற வசனம் தான் எனக்கு 'ரஜினி முருகன்' படத்தின் பிடித்த வசனம்

* விஜய் சார் கையால் விருது வாங்கியது எனது வாழ்வில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று. அப்போது அவர் பேசிய வார்த்தைகள் மறக்க முடியாத ஒன்று.

* அஜித் ஒரு சிறந்த மனிதர். அவருடைய வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளை மறக்க மாட்டேன்.