இசைப்பிரியா குறித்த படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை

Friday, 29 January 2016 - 19:31

%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய இசைப்பிரியா எனும் ஊடகவியலாளர் குறித்து தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
'போர் களத்தில் ஒரு பூ' என்ற பெயரிலான திரைப்படத்தை தடை செய்யும்படி அவரது தாயாரும் சகோதரியும் சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளதாக 'த ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கான அனுமதி திரைப்பட இயக்குனரான கே. கணேஷனினால் கடந்த ஆண்டு மே 6ஆம் திகதி கோரப்பட்டிருந்தது.
 
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது, லண்டனை தளமாக கொண்டுள்ள சனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காணொளியின் மூலமே இசைப்பிரியா தொடர்பான கதை தமக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
எப்படியிருப்பினும் அவரது கோரிக்கை சென்னை மத்திய திரைப்பட நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
 
நட்பு அயல் நாட்டு பெண் ஒருவருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்பட அமைந்துள்ளதாக தெரிவித்தே அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.