ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய சாதனை!

Monday, 01 February 2016 - 8:56

%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21

இன்றைய காலகட்டத்தில் பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடும் கருவியாக சமுகவலைதளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை அதிகமாகப் பயன்படுத்திவருகின்றனர். பிரபலங்களைப் பற்றியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் முதல் செய்திகள் வரை வெளியாகும் ட்விட்டரில் இப்போதைக்கு தென்னிந்தியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் டாப் என தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. தென்னிந்தியாவிலேயே அதிக பாலோயர்ஸ் கொண்ட ஒரே பிரபலம் ரஹ்மான் தான். உலகளவில் ட்விட்டர் பாலோயர்ஸில் 158வது இடத்தில் இருக்கிறார்.

இதுவரை ரஜினி 27 லட்சமும், தனுஷ் 23 லட்சமும், சித்தார்த் 19 லட்சமும் மற்றும்  சிவகார்த்திகேயன் 14 லட்சம் பாலோயர்ஸ் கொண்டுள்ளனர். சமீபத்தில் கமல்ஹாசன் ட்விட்டரில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.