அயர்ன்மேன், பேர்ட்மேன் வரிசையில் அடுத்த படம் டெட்ஃபூல் - ட்ரேய்லர்

Monday, 01 February 2016 - 12:28

%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களின் வரிசையில் தமிழில் டப் செய்து வெளியாகவிருக்கும் படமே டெட்ஃபூல்.

காமிக்ஸ் புத்தகத்திற்காக ஃபாபியன் என்ற எழுத்தாளர் உருவாக்கிய கதாபாத்திரமே டெட்ஃபூல். கூலிப் படைக்குத் தலைமை தாங்கும் வெட் வில்சன் தன்னுடைய சின்ன வயதில் பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டவர். சர்வதேச அளவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருக்கும் போது, தனக்குப் புற்று நோய் வந்து இருப்பது அறிந்ததும், தான் ஆற்ற வேண்டிய காரியங்களை விரைவில் சாதிக்க நினைக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வெட் வில்சன், அங்கு நடக்கும் ஆராய்ச்சியால் டெட்ஃபூல்லாக மாறுகிறார். மேலும் அங்கு நடக்கும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அவரைக் கோபப்படுத்துகிறது. அங்கு இருக்கும் வயதான நர்ஸ் அடுத்தாக மரணம் அடையப் போகும் நோயாளி யார் என்பதைப் பந்தயம் கட்டி, அவர்களைக் கொல்லவும் செய்வதை கண்டு கொதிக்கிறார் டெட்ஃபூல்.

அந்தக் கொடிய சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பிக்கிறார், அவருடைய சக நோயாளிகள் எப்படித் தப்பினர் என்பதும், அதன் பின் நடக்கும் சாகசமே டெட் ஃபூல்.

வருகின்ற 12ம் திகதி, தமிழில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.