ஜேம்ஸ்பாண்ட் இடத்தை பிடித்த கபாலி

Monday, 22 February 2016 - 17:29

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இப்படத்தில் ரஜினி சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில், தாடியுடன் அனைவரையும் கவரும் தோற்றத்தில் நடித்து வருகிறார். 

‘கபாலி’ படப்பிடிப்பு தொடங்கும்போதே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது ரசனைக்கேற்ப ரஜினியின் தோற்றத்தை வடிவமைத்து, ‘கபாலி’ போஸ்டராக வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இன்று ‘கபாலி’ படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் என்று ஒன்று வெளிவந்தது. அதில், ரஜினி கோட் சூட்டுடன் விலையுயர்ந்த காரின்மீது கையில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருப்பது போன்றதொரு புகைப்படம் வெளியாகியிருந்தது. 

இது ‘கபாலி’ படத்தின் போஸ்டர்தான் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால், அந்த போஸ்டரை ஆராய்ந்ததில், அது ‘கபாலி’ படத்தின் உண்மையான போஸ்டர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.   

இந்த புகைப்படம் ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் வெளிவந்த ‘ஸ்கைபால்’ படத்தின் போஸ்டரில், ஜேம்ஸ்பாண்டின் தலையை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, அதில் ரஜினி ‘கபாலி’ கெட்டப்பில் உள்ள தலையை ஒட்ட வைத்துள்ளனர்.

ஆனால், இதில் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அந்த போஸ்டரை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். 

இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், அடுத்து வரும் ‘கபாலி’ படத்தின் போஸ்டர் இந்தளவுக்கு மாஸாக இருக்குமா? என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அதற்கான பணிகளில் படக்குழுவினர் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர்.