தீர்வு காணும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படவில்லை..?

Friday, 11 January 2019 - 19:01

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..%3F
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே அன்றி வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உத்தேச புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படவில்லையென தேசிய தேரர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அந்த ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் பாஹியங்கலை சாகர தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு வரைவு உருவாக்கப்பட்டுவருகின்றது.

விடுதலைப்புலி ஆதரவு தெற்கு மற்றும் வடக்கு கட்சிகளின் தேவைகளையே நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.

புலம்பெயர் அமைப்புக்களின் பணத்திற்காக அரசயில் கட்சிகளும் வடக்கில் தமிழ் கட்சிகளும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

வடக்கு மக்களுக்கும் சமத்துவம் அவசியமானது.

வடக்கிற்கும் சட்டம் நீதியானதாக அமைய வேண்டும்.

தெற்கில் உள்ளவர்கள் எதிர்ப்பார்க்கின்ற விடயங்கள் வடக்கில் உள்ளவர்களுக்கும் கிடைக்கின்றபோது பிரிவினை ஏற்படாது.

தற்போது, வடக்கையும் தெற்கையும் பிளவுபடுத்தி 30 ஆண்டுகால சாபத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  தற்போதை நிலையில், நாட்டின் முக்கிய தேவையாக இருப்பது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக நாடு பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நிலையில், மேற்குலக நாட்டவர்கள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அரசசார்ப்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் தேவைக்காகவே அரசியலமைப்பை  மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக விஜேதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
 
 
 
 
 


பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 2517ஆக அதிகரிப்பு
Monday, 03 August 2020 - 13:52

இலங்கையில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து... Read More

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பாயோ
Monday, 03 August 2020 - 13:40

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னாள் அதிகாரி அனுருத்த... Read More

கொரோனா காரணமாக பாதிப்பை எதிர்நோக்கும் சுற்றுலாத் துறை..!
Monday, 03 August 2020 - 13:37

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளான... Read More