அமெரிக்க படையணியினரை வெளியேற்றும் பணிகள்...

Friday, 11 January 2019 - 20:43

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான படையணியினரை வெளியேற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டு படையணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், படையினரை வெளியேற்றும் இடங்கள் மற்றும் கால அவகாசம் குறித்து மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.

இதேநேரம், சிரியாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள மீலன் வானூர்தி தளத்தின் ஊடாக படையணியினரை மீள பெறுவதற்கான பணிகள் இடம்பெறுவதாக சிரியாவை தளமாக கொண்டுள்ள கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று ஒரு சில இராணுவ அதிகாரிகள் இந்த வானூர்தி தளத்தின் ஊடாக வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள படையினர் மீள அழைக்கப்படுவர் என கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததன் பின்னர் சிரியாவில் இருந்து வெளியேற்றப்படும் முதலாவது தொகுதி படையணியினர் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அமெரிக்காவின் தலைமையிலான படையணியினர் இரண்டாயிரம் பேர் வரை உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாடுகளுக்கு பதில் மகள்களை பூட்டிய விவசாயி- மனதை உருக்கும் காணொளி
Monday, 03 August 2020 - 14:31

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச்... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு
Monday, 03 August 2020 - 13:59

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு,... Read More

கொரோனா தொற்றுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா..!
Monday, 03 August 2020 - 9:57

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள... Read More