நிரந்தர வதிவிட அனுமதி..?

Friday, 11 January 2019 - 21:55

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..%3F
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு தமது நாட்டில்  நிரந்தர வதிவிட அனுமதியினை வழங்க கனடா முன்வந்துள்ளது.

எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியினுள், கட்டம் கட்டமாக நிரந்தர வதிவிட உரிமையினை வழங்குவதற்கான திட்டத்திற்கு கனேடிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு நிரந்தர வதிவிட உரிமையினை கனடா வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக வதிவிட உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதுடன், 2021ஆம் ஆண்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கனடாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதிப்படைந்த அகதிகளுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்குவதில் கனடா முக்கிய நாடாக உள்ளதாக கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் அகமட் ஷூசேன் தெரிவித்துள்ளார்.

அவர், சோமாலியாவில் இருந்து அகதியாக கனடாவிற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


மாடுகளுக்கு பதில் மகள்களை பூட்டிய விவசாயி- மனதை உருக்கும் காணொளி
Monday, 03 August 2020 - 14:31

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச்... Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு
Monday, 03 August 2020 - 13:59

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு,... Read More

கொரோனா தொற்றுடன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா..!
Monday, 03 August 2020 - 9:57

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள... Read More