தன்னை விட 42 வயது அதிகமான பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!!

Wednesday, 16 January 2019 - 16:08

%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F+42+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%21%21
ரஜினிகாந்த் நடிப்பில் '2.0' படத்துக்கு பிறகு 'பேட்ட' படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் (பெப்ரவரி) ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளனர்.

முந்தைய படங்களான ரமணாவில் இலஞ்சத்தையும், 'கத்தி'யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், 'சர்கார்' படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார்.

அவரது மற்ற படங்களும் வௌ;வேறு கதை களங்களில் இருந்தன.

தற்போது ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்துக்கு 'நாற்காலி' என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

பேட்ட படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது.

புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர்.

தற்போது கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பேசப்பட்டது.

தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் அவர் இப்போது ரஜினிக்கும் ஜோடியாகிறார்.

Keerthy Suresh and Rajinikanth