பத்தனை கல்வியியற் கல்லூரியில் மதுபான விருந்துபசாரம் - வெளியான காணொளி

Monday, 11 February 2019 - 10:42

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் பதிவாளர் சுனில் கருணாசிறி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில் கடந்த 28 வருடங்களாக கடமையாற்றி வரும் சுனில் கருணாசிறி என்பவர் கல்லூரியிலுள்ள மாணவர்களின் உணவு தேவைக்காக மேற்கொள்ளப்படும் கொள்வனவின் போது தொடர்ச்சியாக ஊழல்களை புரிந்து வருவதாகவும், வாகனங்களை தனது சொந்த தேவைக்காக முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் கல்லூரியின் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் அலுவலக நேரத்தின் ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் வளாகத்திற்குள் மதுபானம் அருந்தியதாகவும், பல வருடங்கள் இவ்வாறான செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மதுபானம் பருகிக்கொண்டிருக்கையில் மாணவர்களால் காணொளி ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகின்றது.

இந்நிலையில் அவரை பணிநீக்கம் செய்யகோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிநீக்கம் செய்யாத பட்சத்தில் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் பதிவாளர் சுனில் கருணாசிறி, நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொளி இதோ...