ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தலைவர்கள் 7 பேர் பலி

Monday, 22 April 2019 - 9:11

%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
ஈராக் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதன்போது குறித்த பகுதியில் தலைமறைவாகியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள் என கருதப்படும் 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அந்தநாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.

எனினும், அண்மை காலமாக அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.