இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரிக்கை

Tuesday, 21 May 2019 - 7:46

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ளாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி சகல மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்புக்காக விஷேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள போதும், போலியான மற்றும் வதந்திகள் காரணமாக பெற்றோர்கள், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு தேவையான சகல விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.