விற்பனை நிலையத்தில் 85 இலட்சம் ரூபாய் கொள்ளை! (சிசிடிவி)

Tuesday, 21 May 2019 - 13:12

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+85+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%21+%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%29
ஹங்குராங்கெத - ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றில் 85 இலட்சத்துக்கும் அதிக பணத்தை கொள்ளையிட்டு தலைமறைவாகியுள்ள இருவரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கடந்த 19ம் திகதி குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி , சந்தேகநபர்கள் நீண்ட காலமாக  மேற்படி விற்பனை நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளதாக  காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் மேற்படி விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.