ரஷ்யா செல்லும் 2.0!

Monday, 10 June 2019 - 10:04

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+2.0%21
தமிழ்த்திரையுலகில் பல பிரமாண்ட திரைப்படங்களை எடுத்து, புகழ் பெற்ற இயக்குனர் ஷங்கர்.

இவரது இயக்கத்தில் திரை கண்ட 2.0 திரைப்படம் பெருமளவு வசூலைப் பெற்ற நிலையில், தற்போது அந்த படத்திற்கு, ரஷ்யாவில் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து 3டி தொழில் நுட்பத்தில் தயாரான இந்த படத்தை, ரஷ்யாவில் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த படம் ஏற்கனவே, ஏராளமான நாடுகளில் திரையிடப்பட்டு, பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.